பண்டார் செரி பாண்டி
பண்டார் செரி பாண்டி | |
---|---|
Bandar Seri Bandi | |
திராங்கானு | |
ஆள்கூறுகள்: 4°22′49.1736″N 103°19′37.524″E / 4.380326000°N 103.32709000°E[1] | |
நாடு | மலேசியா |
மாநிலம் | திராங்கானு |
மாவட்டம் | கெமாமான் |
நகரம் | செத்தியூ |
தொகுதி | கெமாமான் மக்களவைத் தொகுதி |
ஊராட்சி | கெமாமான் நகராண்மைக் கழகம்[2] |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 24200 |
தொலைபேசி | +6-09 |
போக்குவரத்து எண் | T |
இணையதளம் | mds |
பண்டார் செரி பாண்டி; (ஆங்கிலம்: Bandar Seri Bandi; மலாய்: Bandar Seri Bandi) என்பது மலேசியா, திராங்கானு மாநிலத்தில், கெமாமான் மாவட்டத்தில் (Kemaman District) உள்ள ஒரு நகரம் ஆகும்.[3]
திராங்கானு மாநிலத்தின் தலைநகரான கோலா திராங்கானு (Kuala Terengganu) மாநகரில் இருந்து 152 கி.மீ. தொலைவில் தெற்கில் உள்ளது. ஆனால் பகாங் மாநிலத்தின் தலைநகரமான குவாந்தான் மாநகரில் இருந்து 89 கி.மீ. தொலைவில் சற்று நெருக்கத்தில் உள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத ஓர் அமைதியான கிராமப்புற நகரமாகும்.
பொது
[தொகு]பண்டார் செரி பாண்டி நகரத்திற்கு வடக்கில் பாக்கா, கோலா டுங்குன், மாராங் நகரங்கள் உள்ளன. தெற்கில் சுக்காய், பாலோக், குவாந்தான் நகரங்கள் உள்ளன.
இந்த நகரத்திற்கு அருகில், ஏறக்குறைய 9 கி.மீ. தொலைவில் பெனித்தி அருவி (Penitih Waterfalls) உள்ளது. இது ராசாவ் - கெர்த்தே (Rasau/Kertih) நிரந்தர வனப் பகுதியில் உள்ளது. சுற்றிப் பார்க்க விரும்புபவர்களுக்கு நவம்பர் முதல் ஏப்ரல் வரை மிகவும் பொருத்தமான பருவம் ஆகும்.
இங்குள்ள சுவாரசியமான நடவடிக்கைகளில் மகிழ்வுலா (Picnics) மற்றும் முகாமிடல் (Camping) ஆகியவை அடங்கும். பெனித்தி நீர்வீழ்ச்சியில் எட்டு நிலை நீர்வீழ்ச்சிகள் உள்ளன. ஒவ்வொரு தளத்திற்கும் வெவ்வேறு விவரக் குறிப்புகள் உள்ளன. ஒவ்வொரு தளமும் வெவ்வேறு ஆழம் கொண்டது.
கெமாமான் மாவட்டம்
[தொகு]திராங்கானு மாநிலத்தில் உள்ள எட்டு மாவட்டங்களில் இந்த மாவட்டமும் ஒன்றாகும். கெமாமான் மாவட்டத்திற்கு கிழக்கில் தென் சீனக்கடல்; வடக்கில் டுங்குன் மாவட்டம் (Dungun District); தெற்கிலும் மேற்கிலும் பகாங் மாநிலம் எல்லைகளாக உள்ளன. இந்த மாவட்டம் திராங்கானு மாநிலத்தின் தெற்கு நுழைவாயிலாக அமைகின்றது.
கெமாமான் மாவட்டத்தின் நிர்வாக மையம் மற்றும் முக்கியப் பொருளாதார மையம் சுக்காய் நகரம். திராங்கானு - பகாங் மாநிலங்களின் எல்லைக்கு அருகில் உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Bandar Seri Bandi, Kemaman, Terengganu". Find Latitude and Longitude (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 June 2023.
- ↑ http://apps.water.gov.my/jpskomuniti/dokumen/KEMAMAN_PROFIL_MAC_20112.pdf பரணிடப்பட்டது 2017-05-17 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Administrator. "Mengenai Daerah Kemaman". pdtkemaman.terengganu.gov.my. Archived from the original on 2021-04-23. பார்க்கப்பட்ட நாள் 2023-06-30.
மேலும் காண்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் Kemaman District தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Visit Terengganu 2008 Blog